Clicky

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 03 OCT 2001
ஆண்டவன் அடியில் 12 JUN 2023
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
அமரர் அனுஷன் அகிலன் 2001 - 2023 Holland, Netherlands Netherlands
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அனுஷன் அகிலன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே!
பாசத்தின் உறைவிடமே!
பண்பின் சிகரமே!
எம்மைவிட்டுப் பிரிந்து 45 நாட்கள் ஆனதே
இதயங்கள் நொருங்க கண்ணீர் துளியாக்கி
கண் இமைக்கும் நேரத்தில்
எங்கே பயணமானாய்
விதிசெய்த சதியோ
இல்லை சதி செய்த விதியோ
நாம் அறியோம்.
உன் அப்பா அம்மா தங்கைக்கு தூணாய்
துணை நிற்பாய் என நம்பி இருந்தோமே
எல்லாம் கணவாகிப் போனதுவே!
ஆறாது மாறாது உன் துயர் தீராதையா
நீ எங்களை விட்டு தூரத்தில் இல்லை
நினைவுகளில் இருக்கிறாய்
எங்கும் போகவில்லை
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்
மீண்டும் எமது குடும்பத்தில் வந்து
எமக்கு ஆறுதல் தந்துவிடு!

உனது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 59 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

அகாலமரணம் Tue, 13 Jun, 2023