நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அனுஷன் அகிலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்..
உலகமும் நிஜமில்லை,
உனக்கு கரம் கொடுக்காத
உன்
நண்பர்களும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உந்தன் இழப்பால்..
ஏரியில் வீழ்ந்த நண்பனுக்கு
கைகொடுத்தாய் அவன் கரைசேர
கரைக்கு அவனோ வந்துவிட்டான்
ஏரியில் நீயோ உயிர் துறந்தாய்
கமலியின் மகனாய் வந்து உதித்தாய்
கங்கையின் மகனாய் சென்று விட்டாய்...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
உன்னை காணமுடியாமல் காலத்தின் கொடுமை
கங்கைமடியில் சங்கமித்தாய் என்ன விந்தையடா
உன் தாய், தந்தை, சகோதரி, உற்றார், உறவினர், நண்பர்கள்
எல்லோரையும் தவிக்க விட்டு
சென்று விட்டாய் அன்பு மகனே...
என் உடன் பிறப்பே நீ எம்மை விட்டு பிரிந்ததை
நினைக்கையில் விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகள் உறவுகளை
மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி மௌனமாக்குகிறது
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி மூன்றாண்டு ஆண்டு
நினைவு நாளில் விழி அருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உமைப்பார்த்து!!
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
We miss you செல்லம்💐🙏