Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1964
இறப்பு 19 JUN 2018
அமரர் அமரசிங்கம் சிவகுமார்
வயது 53
அமரர் அமரசிங்கம் சிவகுமார் 1964 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 12-07-2024

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

 என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

 சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம் எப்போது
காண்போம் அப்பா...

கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே அப்பா
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
நாம் யாரிடமும் இன்னும் அறியலையே.....

நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
 மனைவி, பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்