3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1964
இறப்பு 19 JUN 2018
அமரர் அமரசிங்கம் சிவகுமார்
வயது 53
அமரர் அமரசிங்கம் சிவகுமார் 1964 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16.06.2021

அன்போடும் பாசத்தோடும் எங்களை அனுதினமும்
அரவணைத்த ஆருயிர்
 தெய்வமே! அப்பாவே!
உங்கள் வீட்டிற்கு ஏணியாய் உங்கள் பிள்ளைகளுக்கு உயிராய்
இருந்தீர்களே அப்பா!

நீங்கள் இந்த மண்ணுலகை விட்டு வெகுதூரம்
சென்றிருந்தாலும் இன்னும் உங்கள் முகம் எங்கள் கண்
முன் வந்து போகின்றது அப்பா!

உங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம்
தவியாய் தவிக்கிறதே! திரும்பத் திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா அப்பா!

நாங்கள் கட்டிய மனக்கோட்டை எல்லாம் நீங்கள்
இல்லாமல் எங்களுக்கு ஒரு நொடிப் பொழுதில் மணல்
கோட்டை ஆனதுவே அப்பா!

எங்கள் மனதுக்கு பாரமாய் உள்ள போதும் எம் அருகில்
இருந்து கட்டி அணைக்கவும் ஆறுதல் படுத்தவும் நீங்கள் இல்லை
அப்பா!

“அப்பா” என்ற சொல்லுக்கு கலங்கரை விளக்காய் இருந்தீர்களே
கடலோடு அலை உறவாடுவது போல்- எங்கள் அன்பையும்
பாசத்தையும் மனதோடு உறவாட- உங்கள் பிள்ளைகளுடன்
கூடி மகிழ இன்று நாளை என்று எம்முடன் நீங்கள் இங்கு இல்லையே!

உங்கள் ஆத்மா சாந்தி பெற ஆண்டவணை வேண்டுகின்றோம்..
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன் வாடும்
அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்