4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1964
இறப்பு 19 JUN 2018
அமரர் அமரசிங்கம் சிவகுமார்
வயது 53
அமரர் அமரசிங்கம் சிவகுமார் 1964 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 06-07-2022

எங்கள் நெஞ்சங்களில்
என்றென்றும் நிலையாய்
நிறைந்த அன்புத் தெய்வமே!
ஆசைத் தந்தையே!!

ஒவ்வொரு நாளும்
உங்கள் முகம் பார்க்காமல்
நாம் இங்கு வேதனையில் கலங்கித்
தவிக்கின்றோம் அப்பா!! 

அன்று இன்றும் உங்களின்
இழப்பின் வலி எங்கள்
நெஞ்சுக்குள் பட படக்குது அப்பா!! 

கனகாலம் மகிழ்ச்சியோடு
வாழ்வீர்கள் என கனவுகளுடன்
இருந்தோம் அப்பா

அக்கனவுகளை எல்லாம்
தகத்தெறிந்து எங்களுக்கு
துணை இன்றி தவிக்க விட்டு
ஏன் சென்றீர்கள் அப்பா!!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சம் வலிக்கிறது அப்பா!! 

எத்தனை உறவுகள் எம்
அருகில் இருந்தாலும் ஆசையுடன்
“அப்பா” என்று அழைப்பதற்கு
நீங்கள் எம்முடன் இல்லையென
நினைக்கும் போது எங்கள் கண்களின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றது அப்பா!

உங்கள் ஞாபகத்தில் எங்கள் மனம் எப்பொழுதும்
அப்பா அப்பா என்றே தேடுகின்றது மீண்டும்
ஓருமுறை எழுந்து வந்து எம் அருகில்
எங்களுடன் இருக்க மாட்டாயா அப்பா....!!???

என்றும் அழியாத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம்

ஓம் சாந்தி!ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்