
இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கெனப் பிறந்திட்ட மான்குட்டியே!
மடிதனில் தவழ்ந்திட்ட பொன்மகளே என்மகளே!
உம்மைச் சுமந்த தோளில்
சூடாறவில்லை திருமகளே என்மகளே!
கண்விழித்து வளர்த்தோமே!
எம்மைத் தவிக்கவிட்டுச் சென்று விட்டாய்
மகளே என்மக்ளே! நீ தந்த முத்தத்தை
நினைவாக்கி கரை புரண்டு அழுகின்றோம்
கை கூப்பி நிற்கின்றோம்.
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை ..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?
துடுப்பு இல்லாத படகு போல
சிறகு இல்லாத பறவை போல
திசையறியாது தவிக்கின்றோம்
துடிக்கின்றோம்- வந்துவிடம்மா என்மகளே....
பாருலகம் கண்ணீரை
மழையெனவே சிந்திடுதே- நீ
வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
நீ மீண்டும் எமை அடைய வேண்டுகின்றோம் என்மகளே!