3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/200391/7c4d7111-0c69-41ae-b656-340d6dcfa170/22-631075b6cc0dd.webp)
Tribute
37
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகளே!!!!!!!
உனையிழந்து மூன்று ஆண்டுகள்
ஆகிவிட்டது
உனை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்
உன்னை நாங்கள் தினம் தினம்
எதிர்ப்பார்த்து
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம்
மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???
இன்று வரை நாம் மூன்று வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
அன்பு மகளே!!!!
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்