Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 DEC 2012
உதிர்வு 09 OCT 2020
செல்வி யோச் வாசின்டன் அஞ்சலினா
வயது 7
செல்வி யோச் வாசின்டன் அஞ்சலினா 2012 - 2020 இத்தாலி, Italy Italy
Tribute 37 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகளே...!

கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!

கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி - நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம் இறை
பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Oct, 2020
நன்றி நவிலல் Sun, 08 Nov, 2020