2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
37
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
இத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தன் அன்புச் செல்வமே...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும்! எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய்
என்றிருந்தோம்!
அத்தனையும்
நீ கனவாக்கி
எங்கு
சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமம்மா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன்
எம் பயணம் நாளும் தொடர்கிறது
உன் வரவை எதிர்பார்த்து..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்