5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜயானந்தன் நாகராஜா
(விஜே, ஆனா)
World Customs Framing உரிமையாளர்
வயது 44
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-05-2026
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி இல்லறம்
என்னும் இன்பத்தை இமை
போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து
ஐந்து வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
ஐந்து ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
RIP