Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 NOV 1976
இறப்பு 25 MAY 2021
அமரர் விஜயானந்தன் நாகராஜா (விஜே, ஆனா)
World Customs Framing உரிமையாளர்
வயது 44
அமரர் விஜயானந்தன் நாகராஜா 1976 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் நாகராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி: 10-06-2025

தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா

இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?

உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?

காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்