கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயானந்தன் நாகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
 நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் 
கனப்பொழுதில்
நடந்தவைகள்
 நிஜம் தானா - என்று
 நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீங்கள் இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா 
கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ
 காயத்தை
நீங்காத உங்கள் நினைவுகள் 
எமை வந்து வாட்டுகிறது
கண் நிறைந்த உங்கள் தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே
 இன்முகம் காட்டி
நம் இல்லம் சுற்றிய
 நாட்களை எப்படி மறப்போம்!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
 உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பீர்
 நீங்கள் மறைந்த நாள் முதலாய் 
நினைவிழந்து வாழும்
உமது உறவுகளின் கண்ணீர்த்துளிகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
                    
        
                    
                    
RIP