10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 61
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
1953 -
2015
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 06-03-2025
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ?
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
பத்து ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நினைவுகள் அழியவில்லை
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் பாசத்திற்கு நாம்
பட்ட கடன் தீராதம்மா..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணி, அக்காவின் ஆத்மா சாந்தியடைய சிவபெருமானை வேண்டிக்கொள்கின்றோம். திருநா லட்சுமி குடும்பத்தார் ஜெர்மனி