Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 26 MAY 1939
மறைவு 26 JUL 2018
அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா
ஸ்தாபகர்- டென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை
வயது 79
அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா 1939 - 2018 வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 28/07/2026

தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே...
 நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில் நீர்க்கோலம்
 இன்றும் எம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட,
எம் மனமோ உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
 எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
 இன்றும் நாம் நீங்கள் கற்று தந்த பாதையில்,
எம் ஒவ்வொரு அடியிலும் உங்கள் முகம் எங்கள் கண்முன் அப்பா.
 ஆண்டுகள் எத்தனை ஆனாலும் உங்கள் நினைவும்,
பாசமும் குறையின்றி கூடிச் செல்கின்றது.
 உங்கள் ஆசியுடன் நம் குடும்பமும்
பெரிதாகிக் கொண்டு செல்கின்றது.
அன்றும் இன்றும் என்றும்
உங்கள் ஆசி வேண்டி நிக்கின்றோம் அப்பா.
 என்றும் உங்கள் நினைவுகளுடன்
எங்கள் பயணம் தொடர்கின்றன...

தகவல்: குடும்பத்தினர்