Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 APR 1940
இறப்பு 06 JAN 2023
அமரர் வீரகத்தி சிவபாக்கியம் (இராசமணி)
வயது 82
அமரர் வீரகத்தி சிவபாக்கியம் 1940 - 2023 மிருசுவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவபாக்கியம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காக திகழ்ந்து எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த அமரர் வீரகத்தி சிவபாக்கியம்(இராசமணி) அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களிற்கும் நேரில் வந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும், ஆறுதல் செய்தி கூறியோரிற்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு அஞ்சலி செலுத்திய அனைவரிற்கும் மற்றும் பார்வையிட்டு அஞ்சலி செலுத்துதல் தொடக்கம் இறுதி நிகழ்வுகள், தகனம் வரை சிறந்த முறையில் நேர்த்தியாக ஒழுங்கு செய்து தந்த Pompes Funèbres Amethyste International நிறுவனத்திற்கும் இறுதி நிகழ்வுகள் அனைத்தையும் வலைத்தளம் ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்த L Cast Tv குழுவினருக்கும் இறுதி நிகழ்வின்போது தங்களது உணர்வுகளை உரையாகப் பகிர்ந்தவர்களுக்கும், இறப்புச் செய்தியை பிரசுரித்த லங்காசிறி இணையத்தள மரண அறிவித்தல்(RIPBOOK) குழுமத்தினருக்கும், பதாகை மற்றும் படங்களை சிறந்த முறையில் அழகுற செய்து தந்த OLYMPIC PRINTERS (Paris) அச்சகத்தினருக்கும் வீட்டுக்கிருத்திய அழைப்பிதழை வடிவமைத்து உதவிய Shadow Print Mart(Sri Lanka) அச்சகத்தினருக்கும் , மற்றும் அந்தியேட்டி நிகழ்வுகளை செய்வதற்குரிய மண்டப இடத்தை தந்துதவிய SARL LOCASALLE 78 நிறுவனத்திற்கும், மற்றும் சிற்றுண்டி, உணவுகளை தந்துதவிய அனைவருக்கும், 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் பங்கு கொண்ட எல்லோருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்