திதி: 13-01-2025
யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி சிவபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்...
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை...
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை...
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உம் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 13-01-2025 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் இப் பிரார்த்தனை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.