திதி: 03-01-2026
யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி சிவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே எம்
உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது..!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலியின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 03-01-2026 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் இப் பிரார்த்தனை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.