யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி சிவபாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-12-2023
அன்புள்ள அம்மாவுக்கு ஓராண்டு நினைவஞ்சலி
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த
எம் அன்புத் தெய்வமே
நீங்கள்
மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள்
நினைவுகள் என்றும் எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள் எம்முள்ளே
நித்தமும் அலைமோதிய வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள்
வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா..
ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
என் நினைவிலும் ம
றக்கமுடியவில்லை! அம்மா!
உன் இனிமையான நினைவுகளை நினைக்கும் போது
நிலைகுலையச் செய்யுதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நித்தமும் அந்த
இறைவனைப் பிரார்த்தனை செய்து
பூசிக்கின்றோம் அம்மா...
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 26-12-2023 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் இப் பிரார்த்தனை நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.