எங்களது ஊரில் வாழ்ந்த புகழ் பூத்த ஆசிரியர்களில் ஒருவர் தான் எங்களினுடைய வசந்தா அன்ரீ, எங்கள் அயல் வீடும் கூட போர் கால சூழ் நிலையால் அவர்கள் குடி பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களுடன் இருக்கும் நெருக்கத்தை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. வசந்தா அன்ரி என்று நானும் வசந்தா அக்கா என்று எனது அம்மாவும் அழைப்போம். இனி வசந்தா அக்கா என்று சொல்ல வசந்தா அன்ரியும் இல்லை , சின்னகுஞ்சு என்று அழைக்க எங்கள் அம்மாவும் இல்லை. வசந்தா அன்ரி அம்பலந்தறை வைரவரின் பாதங்களில் சரணாகதி அடைந்த துயரச்செப்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவரது இழப்பால் கலங்கி நிற்கும் Dr .மாமாக்கும் அக்காவைக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்து கொள்கிறோம். வசந்தா அன்ரியின் புனிதமான ஆத்மா வைரவர் நிழலில் இளைப்பாறட்டும் றஞ்ஜீத்தா , பிரதீப் , அனிஷ்
Deeply saddened to hear of the passing of our late teacher from Skandavarodaya College. To many of us, she was a motherly mentor whose influence was the definitive turning point in our academic and...