சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் அம்பலந்தரையை உறவிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்த மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் வசந்தமலர் நடராஜா மருவத்தூர் அம்மனின் பாதங்களை வணங்கி அம்பலந்தரையானுடனும் ஆலங்குழாயானுடனும் ஐக்கியமாகி அவர்களின் வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
31 நாட்கள் ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை
அன்னாரின் வாழ்வியல் ஓவியப் பகிர்வு நிகழ்வு 24-05-2026 அன்று பி.ப 01:30 மணியளவில் Rajasthan(அவரது இல்லம்) அம்பலந்தரை சண்டிலிப்பாய் வடக்கு , சண்டிலிப்பாய் எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன உபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
முகவரி:
Rajasthan இல்லம்,
அம்பலந்தரை சண்டிலிப்பாய் வடக்கு ,
சண்டிலிப்பாய்.
சுவீஸ்
அன்னாரின் வாழ்வியல் ஓவியப் பகிர்வு நிகழ்வு 24-05-2026 அன்று மு.ப 10:00 மணியளவில் அமிர்தம் நல்நிகழ்வு மண்டபம் Eichstrasse 49 8152 Glattbrugg Switzerland எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன உபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
முகவரி:
அமிர்தம் நல்நிகழ்வு மண்டபம்
Eichstrasse 49
8152 Glattbrugg
Switzerland.
Deeply saddened to hear of the passing of our late teacher from Skandavarodaya College. To many of us, she was a motherly mentor whose influence was the definitive turning point in our academic and...