Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 AUG 1938
விண்ணில் 30 APR 2021
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (Vms)
திருப்பூர் ஒன்றிய பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை
வயது 82
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் 1938 - 2021 Myliddy, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பல கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க
உங்கள் முகம் காண...

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ? எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices