யாழ். கந்தர்மடம் அன்னசத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமாரி ரவிந்திரராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை அழைப்பும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் தலைவியாய், எமது பரந்துபட்ட உற்றார், உறவினர்களுடன் பாசப்பிணைப்பின் அன்புப் பாலமாய் வாழ்ந்த பெருமாட்டியின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில், கொழும்பு பம்பலப் பிட்டி லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வது மண்டபத்தில் நடைபெறவுள்ளது இத்தருணம் எமது உறவினர்கள், உற்ற நண்பர்கள் குடும்ப சமேதராய் வருகை தந்து, பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் பங்குபற்றும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த நிகழ்வு சுகாதார விதுமுறைகளுக்கு அமைவாகவே நடாத்தப்பெறும்,
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அவரது ஈமக்கிரியைகளில் கலந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்டு எமக்கு உதவிகள் பல பிரிந்தவர்களுக்கும் நேரடியாகவும், பத்திரிகை அனுதாபச் செய்தி பிரசுர வாயிலாகவும், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகநூல் வாயிலாக ஆறுதல் தெரிவித்தோருக்கும் மலர் மாலைகள், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
rest in peace