Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUL 1954
இறப்பு 21 JAN 2022
அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா (தங்கா)
வயது 67
அமரர் உதயகுமாரி ரவிந்திரராஜா 1954 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடம் அன்னசத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமாரி ரவிந்திரராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா

வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா

ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos