

யாழ். கந்தர்மடம் அன்னசத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமாரி ரவிந்திரராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2024
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த
கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும் நம் நோய்நொடி
அம்மா என்பவள் ஓர் அதிசயம்
அவளே எம் இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
rest in peace