பாடையிலே உமைச் சுமக்க பாவி எமை விட்டுவிட்டு ,பார்க்காமலே நீ போனதெங்கே?மீண்டுமொரு பிறப்பிருந்தால் காத்திருப்போம் வந்துவிடு மகிழ்ந் திருப்போம்....... சேர்ந்து திரைப் படம் எடுக்க ,தோல்விகளை வெற்றியாக்க , மாய்ந்து,மாய்ந்து எம் சமூகத்தின் குறை தீர்க்க வலி சுமக்க. ஓய்ந்த வயதில் ஊர்க் கடலின் கரை ஓரம் நடந்தபடி முடிந்தகதை,முடிவில்லாதுணர்ந்தகதை சிவன்ராத்திரிக் கதை பேசியபடி மீந்த காலத்தை முடிக்கவென நீயுரைத்த இக் கனவை சேர்ந்து நனவாக்க இன்று நீயில்லையே ரவி எனைமுந்தி நீ நீ பறந்தாய் என் சிறகொன்றை ஏன் முறித்தாய் பலமுறை இறந்த்திறந்து மீண்ட எனை இன்று நீ கொன்றாய் சென்றுவா ரவி கண்ணீரால் விடை தந்தோம் உனைமறவோம் சேர்ந்துழைத்த காலத்தை நாம் மூச்சுவிடும்வரை நினைத்திருப்போம். வயலூரன் காலடியில் எமக்கும் இடம்விட்டு அமைதிகொள்வாய் அமைதிகொள்வாய். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
நட்பின் வலி!!!! ஆயிரம் கனவுகள் கண்ட என் அன்பு நண்பனே ரவி எப்படியடா எமைப் பிரிய உனக்கு மனது வந்தது? ஐம்பதாண்டு நட்பின் ஆணி வேரடா நீ எதை மறப்பேன்! பள்ளிப் பருவத்தின் இளமைக் காலங்களையா? பதின்ம...