Clicky

பிறப்பு 22 DEC 1965
இறப்பு 18 JUL 2021
அமரர் துரைராசா இரவீந்திரன் (துரை, ரவி)
B. A - Tamil, சமூக சேவகர், பல்துறை கலைஞர்
வயது 55
அமரர் துரைராசா இரவீந்திரன் 1965 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 DEC 1965 - 18 JUL 2021
Late Thurairasa Raveenthiran
நட்பின் வலி!!!! ஆயிரம் கனவுகள் கண்ட என் அன்பு நண்பனே ரவி எப்படியடா எமைப் பிரிய உனக்கு மனது வந்தது? ஐம்பதாண்டு நட்பின் ஆணி வேரடா நீ எதை மறப்பேன்! பள்ளிப் பருவத்தின் இளமைக் காலங்களையா? பதின்ம வயதினிலே நாம் செய்த சேட்டைகளையா? இடம்பெயர்ந்த பின்பும் இடைவிடாத உன் நட்பினையா? நான் கனடா வந்து விட்டேன் என்ற ஒற்றை சொல் உனக்கு போதுமடா , நண்பா ரவி! அடுத்த கணம் நீ அங்கு நிற்பாய், திரும்பிப் போகும் வரை எனைப் பிரியவும் மாட்டாய், எப்படிப் பிரிந்தாய் என் ஆருயிர் நண்பா? உன் அன்பு, காதல் சோகம்,வீரம், விவேகம் பெருமை,வலிகள்,இன்பம் துன்பம்,ஏற்றம், இறக்கம் என எல்லாம் என்னுடன் பகிர்ந்த என் இனிய நண்பா ? உன் மரண வலிகளை மட்டும் என்னுடன் பகிரவில்லையே ஏன்? அன்பு நண்பனே ரவி! உன் நண்பன் தாங்க மாட்டான் என்று நினைத்திருப்பாயோ என்னமோ. என் இதயத்தின் எல்லா இடங்களிலும் நீ தானே வீற்றிருக்கிறாயடா ரவி, ஐம்பதாண்டு தாண்டிய எங்கள் நட்பினைப் பிரிக்க மரணத்துக்கு ஏதடா வலிமை? உன் அசைவற்ற உடலை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை, உன்னை தீ தீண்டுவதைப் பார்க்கும் வலிமையும் எனக்கு இல்லை நண்பனே! அதனால் நான் வர மாட்டேன்! நீ என்னும் என்னுள் வாழ்கிறாய் என்னும் நினைப்போடு நான் வாழ்ந்திடுவேன், அமைதியாகத் தூங்கடா நண்பனே! மறு பிறப்பொன்று இருந்தால், நீயும் நானும் மீண்டும் அந்த புங்குடுதீவின் மண்ணிலே புழுதியில் நனைவோம். அன்பு நண்பன் பகி சுவிஸ்
Write Tribute

Tributes