யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரவீந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
22-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுவிஸ்வாழ் உறவுகளால் அமரர். துரைராசா இரவீந்திரன் அவர்களது நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்னாரின் அமரத்துவ 31 வது நாளில் சுவிஸ் பேர்ண் மாநகரில் நினைவஞ்சலியும் அவரது ஆத்மா சாந்தியடைந்து இறைவன் பாதம் செல்ல வேண்டுதலையும் அமரரோடு பழகிய நட்புக்களின் அனுதாபவுரையும் நினைவுரையை மீட்பதோடு மதிய உணவும் நடைபெறவுள்ளது. இவ் நினைவேந்தலை ஒழுங்கு செய்த உறவுகள் மற்றும் பங்குபற்றவுள்ள உறவுகளுக்கும் நன்றிகளைத்தெரிவிப்பதோடு, தாயகத்திலே நேரில் வந்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தவர்கள் சமூக வலைத்தளங்களூடாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்தவர்களுக்கும் அங்கு நடைபெறும் 31வது நாள் இறைவழிபாட்டில் பங்குபற்றியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நட்பின் வலி!!!! ஆயிரம் கனவுகள் கண்ட என் அன்பு நண்பனே ரவி எப்படியடா எமைப் பிரிய உனக்கு மனது வந்தது? ஐம்பதாண்டு நட்பின் ஆணி வேரடா நீ எதை மறப்பேன்! பள்ளிப் பருவத்தின் இளமைக் காலங்களையா? பதின்ம...