திதி திகதி: 19-11-2021
யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா ஸ்ரீரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதையா
ஆலமரம் அடிசாய்ந்து- நீர்
மீளத் துயில் கொண்டு எமை
ஆறத் துயரில் ஆழ்த்தி விட்டீர்...
காலனவன் செய்த சதி
கரைந்ததுவோ ஓராண்டு
விழி நீர் ததும்பி நிற்க
விடியல்கள் இருண்டிருக்க
விதி என்ன சதியோ என்று
விம்மி அழுதிட்டோம் ஓராண்டாய்...
அன்பின் அகல் விளக்காய்
பண்பின் உறைவிடமாய்
உன்பின் இருந்திட்ட உற்றவரை மற்றவரை
கண்ணுள் நீவைத்து காத்திருந்தாய் காலமெல்லாம்...
அன்னையாய் தந்தையாய்
தன்னளி சேர் நண்பனாய்
எந்தவிடத் தெந்த முகம்
வேண்டுமெனச் சிந்தித்து
அந்தவிடத் தந்த வகை
ஆளுமையோடு ஆடிவந்த
சொந்தத் தலையுடைய சூரியனே...
நம் குல விளக்கே!
இல்லத்தில் நீ நிலவானாய்- எம்
உள்ளத்தில் நீ ஒளியானாய்
கண்ணுக்குள் நீ மணியானாய்- இம்
மண்ணுக்குள் நீ விதையானாய்...
செம்மைக்கு பொருளுண்டேல்
அது உன்வாழ்வு
இம்மைக்கு பெயருண்டேல்
அது உன் இல்லறமே
மறுமைக்கு உயிருண்டேல்
மறுபடியும் நீ எம் குலவிளக்கே...
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவு கொண்டு
ஆரத் துயர் தந்து துயில்பவனே!
ஆண்டுகள் ஒன்று ஆனாலும்
ஆறாது உன் பிரிவு எம்வாழ்வில்...