யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சுரேஸ்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் பல கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்த எமது அன்புத்
தந்தையே!
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும், முத்து போன்ற
சிறந்த பேச்சுமெங்கே காணத்துடிக்கிறது
எம்மனம் வாருங்களே அப்பா!
உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே!
வாசம் குன்றா வாழ்வு தந்து
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய
தந்தையே! உங்களைப்போல்
இந்த உலகில் யார்
இருக்க முடியும் அப்பா!
உங்களின் பாசத்திற்கு
அளவேயில்லை அப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை! அப்பா
அப்பா என்று கூப்பிட ஏங்கிநிற்குது
எங்கள் மனம்! வாருங்கள் அப்பா!
எங்களை பாருங்கள் அப்பா
எங்களது எல்லா செயலுக்கும்
வழிகாட்டுங்கள் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் திருநாவுக்கரசு சுரேஸ்குமார் அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 13-03-2023 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் அத்துடன் ஆத்ம சாந்திப்பிரார்த்தனை 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:45 மணியளவில் Raihaltenstrasse 4, 8912 obfelden, 19. Marz(Zurich, Switzerland) எனும் முகவரியில் இடம்பெறும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.