Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JUN 1970
மறைவு 11 FEB 2023
அமரர் திருநாவுக்கரசு சுரேஸ்குமார்
வயது 52
அமரர் திருநாவுக்கரசு சுரேஸ்குமார் 1970 - 2023 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:31-01-2024(ஷஷ்டி திதி)

யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு சுரேஸ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலவோட்டத்தில் கண்ணிமைக்கும்
பொழுதுக்குள் வருடம் ஒன்று கடந்தது
பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அப்பா
எமைத்தவிக்கவிட்டு ஏன் சென்றீர்.....

பருவகாலமாற்றத்தில் நாங்கள்
செய்த அத்தனையும் பொறுத்து
எமை ஆளாக்கிவிட்டவரே அப்பா
சொல்லாமல் எங்குதான் சென்றீர்.....

வேலைக்குப் போனவர்
வருவாரென வாசல் பார்த்திருந்த அம்மா தவிக்க
பாய் சொல்லிப் போனவர் பாடையிலே
வருவாரென நினைக்கலையே அப்பா...

உங்கள் சொல்லும் சிரிப்பும் ஏன்
கடிந்து கொண்டபொழுதுகளும்
எமக்கு என்றும் மறவாத நினைவுகள்
கடவுளாயிருந்து வழிநடத்தும் அப்பா..

அம்மா அப்பம்மா அத்தை சித்தப்பாவுடன்
இடையிலே விடைபெற்ற தந்தைக்கு
இளவல்களின் சிரம்தாழ்ந்த சமர்ப்பணம் !!



தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

மதிய போசனம் Get Direction
மதிய போசனம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Photos