7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!
மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்
நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்
காலங்கள் உருண்டோடினாலும் எம்
எண்ண அலைகள் என்றென்றும் எதிரொலிக்கும்
உங்கள் நினைவுகளுடன்
தகவல்:
குடும்பத்தினர்
we miss you Antry