1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்
காலப்பெருவெளியெங்கும்
அம்மா உன் நினைவுகளும்
எம்முடன் நடந்து வரும்!
கருவில் எமை சுமந்தாய்
எங்கள் குலக்கொடி நீ
இரு பூக்கள் நாம் மலர மடி தந்தாய்.
அன்பெனும் நிழல் விரித்தாய்
அதிலெம்மை உறங்க வைத்தாய்
ஆயிரம் கனவு கண்டு
எமக்கென உன்னையே பரிசளித்தாய்.
அப்பாவின் கனவுகளை சுமந்து நடந்தாய்.
வாழ்தலின் நிமிர்வை தந்திடும் பயணம் வெல்ல
பாதங்களுக்கு உரம் கொடுத்தாய்.
அனைத்திலும் நீயே தாய்!
என்றென நீ உயர்ந்தாய்.
வாழ்வெங்கும் எம் உயிர் நெஞ்சில்
நீ நிறைந்தாய்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
தி. லட்சணி(மகள்), தி. தளிரினி(மகள்),
பொ. திலக் திருநாவுக்கரசு(கணவர்).
தகவல்:
குடும்பத்தினர்
we miss you Antry