யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்காண்டுகள் கழிந்தும் உன்
ஞாபகங்கள் வாழுதம்மா!
ஒளி தந்தெம் வாழ்வில்
வழி காட்டிய சுட்டும் விழிச்சுடரே!
சூரிய சந்திரன் இல்லையம்மா
எங்கள் வெளிச்சம்,
நீதானே இருந்தாய் எங்கள்
அகல் விளக்காய்,
விழி நீரை எமக்கு பரிசளித்து
விடை பெற்று நீ எங்கு சென்றாய் அம்மா!
உண்ணவும் உறங்கவும் சென்றால்
உன் முகமே தெரியுதம்மா.
படிக்கவென்றொரு புத்தகம் எடுத்தால்
ஒவ்வொரு பக்கங்களிலும்
நீதானே தோன்றுகின்றாய்,
அன்பை மட்டுமா நீ பரிமாறினாய்?
நீ தந்த அறுசுவை உணவும்
அரும்பெரும் உன் அறிவுரையும்
இன்றெமக்கு இல்லையம்மா!
உன் குலக்கொழுந்துகள் நாங்கள்
தொட்டணைத்துன்னை துங்காதிருப்பினும்
உன் உயிர் மூச்சு எப்போதும்
எம்முடன் விழித்திருக்கிறது.
நீ நினைத்தது போல் எங்கள்
வாழ்வும் உயர்வும் நீயில்லா
விடினும் நிகழ்ந்திருக்கிறதம்மா,..
உன் ஆன்மா அதில் திருப்தி கொள்ளும்,
நாம் நினைத்திருக்கவே முடியா
உன் இழப்பு என்றும் ஆறா துயர் எமக்கு.
ஆனாலும் எம்முடன் நீ வாழ்கிறாய்!
பொ. திலக்(கணவர்),லட்சனி(மகள்),
தளிரினி(மகள்),நிசாந்தன்(மருமகன்)சுவிஸ்.