Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1935
இறப்பு 07 SEP 2019
அமரர் திலகவதி விஸ்வநாதன் 1935 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி விஸ்வநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன் என் வாழ்வினிலே!

அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே எம்மைக் காக்கும் கடவுளே!
உயிரை வருத்தி உயிர் தந்தவள்
உடல் வருத்தி உணவு கொடுத்தவள்
தன் உறக்கம் மறந்து உறங்க செய்தவள்
நாம் உலகம் அறிய உயிரையும் தந்த அன்னையே...

உனை காணத் துடித்து கலங்கித்தான் போனோமம்மா – உன்
நினைவோடும் நாம் அழுது ஈராண்டும் ஆனதம்மா…….
ஏனம்மா இமை மூடி நீ சென்றாய்.!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: யோகன்(மூத்த மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்