Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 25 NOV 1947
உதிர்வு 18 JUN 2021
அமரர் கமலாதேவி தேவராஜா 1947 - 2021 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்.

எங்கள் ஆருயிர் அன்னையே
அன்பின் வடிவமாய் அறிவின் சிகரமாய்
பண்பின் இருப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய்
இருந்த எங்கள் அன்புத் தெய்வமே! உங்கள்
மலர்ந்த முகத்தைக் காணாது தவிக்கின்றோம் அம்மா

அன்னாரின் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு எங்கள் துயரத்தில் பங்கு கொண்டும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த உள்நாடு, வெளிநாடு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்கள் ஆருயிர் அன்னை கமலாதேவி தேவராஜா அவர்களின் அந்தியேட்டிக் கிரியை 17-07-2021 சனிக்கிழமை அன்று கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில் நடைபெறும். வீட்டுக்கிரியைகளும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனமும் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 12:00 மணியளவில் வெள்ளவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.