4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 03-07-2025
யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி தேவராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு நான்கு ஆயிற்று!
ஆனாலும் நாம் அழுகின்றோம்
அம்மா அம்மாவென்று கண்மணிகளாய்
எமை ஆளாக்கிவிட்டு காற்றோடு
போய்விட்டீர்களே அம்மா!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து வழி
நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்