3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி தேவராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அஷ்டமி திதி: 14-07-2024
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்