யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் கபிலேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகனே கபில்.....
நீ இப்பூவுலகை விட்டு மறைந்து
ஆண்டுகள் மூன்று கடந்து விட்டது.
இன்றும் நீ எங்களுடன் இல்லை
என்பதை எம்மால் நம்பமுடியவில்லை.
நீ படிக்க வேண்டிய வயதில்
உன்னை வெளிநாடு அனுப்பி வைத்தோம்
அதன் வேதனையை இன்றும்
அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.
என் அன்பு மகனே
நீ பாடசாலை முடிந்து வந்து
என் மடி மீது படுத்து சிறிது நேரம் தூங்குவாய்.
நானும் உன் பால் வடியும்
முகத்தைப் பார்த்து மகிழ்ந்திருப்பேன்.
ஆனால் இன்று உன் முகத்தை பார்க்க முடியாத
பாவியாய் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.
நீ வெளிநாட்டில் இருக்கும் போதும்
ஒவ்வொருநாளும் எங்களுடன் கதைத்து
எங்களை மகிழ்வுடன் வைத்திருப்பாய்
எங்களுக்கு ஏதும் குறைகள் இருந்தாலும்
அல்லது தேவைகள் இருந்தாலும் சரி
நாங்கள் அவைகளை உணரும் முன்பே
நீ அப்பிரச்சனைகளை தீர்த்து வைப்பாய்.
கபில் நீ உன் சுகதுக்கங்களைக் கூட
எங்களுக்கு காட்டிக் கொள்ளாமல்
எங்களுக்காகவே வாழ்ந்தாய்.
எம்மைப் பொறுத்தவரை நாம்
உன் தாய் தந்தை என்பதை விட
நீயே எமக்கு தாய் தந்தையாய் இருந்து
எங்களை வாழவைத்தாய்.
உன் இனிய இல்லறவாழ்க்கையை
பார்த்து மகிழ ஆசை கொண்டிருந்தோம்
ஆனால் கடவுள் உன்னை கல்லறைக்கு
அனுப்பி வைத்துவிட்டான்.
உன் உடலை பார்க்கும் பாக்கியத்தை கூட
இப்பாவிக்கு இல்லாமல் போய் விட்டது.
கபில் உன் பிரிவால் நாங்கள்
எல்லோரும் வேதனை தீயில் இருந்து
மீள முடியாமல் தவிக்கின்றோம்.
இவ்வண்ணம்
உன் அம்மா, அப்பா, குடும்பத்தினர்...