
-
27 APR 1992 - 04 FEB 2018 (25 வயது)
-
பிறந்த இடம் : அச்செழு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் கபிலேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு மகன் கபில்
நீ எங்கள் எல்லோரையும்
விட்டுப் பிரிந்து ஆண்டுகள்
இரண்டாகி விட்டன ஆனாலும்
நீ நேற்றுத்தான் எங்கள்
மடிகளில் தவழ்ந்து விளையாடிது
போன்ற நினைவுகளில்
துடிக்கின்றோம்
எங்கள் அரவணைப்பில்
நீ இருக்க வேண்டிய நேரத்தில்
உன்னை வெளி நாட்டுக்கு
அனுப்பி வைத்தோம்
நீ அங்கிருந்து எங்களுக்கு
ஓர் நல்ல மகனாய் அண்ணனாய்
தம்பியாய் எங்கள் எல்லோரையும்
அரவணைத்துக்கொண்டாய்
எங்கள் எல்லோரையும்
உன் அன்பால் ஏற்றி வைத்த
உனக்கு இவ்வளவு விரைவில்
நாங்கள் எல்லோரும் விளக்கேற்றும்
நிலைவரும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை
கபில் நீ எங்களைப் பிரிந்து சென்றாலும்
எங்கள் உயிரிலும் உணர்விலும்
உறைந்து வாழ்கின்றாய்
மீண்டும் பிறப்பெடுத்து நீ
எங்களுடன் வாழ்வாய் என்ற கனவுடன்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றோம்
ஏக்கமுடன் அம்மா, அப்பா, சகோதரங்கள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அச்செழு, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
