யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவநேசன் கபிலேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் புதல்வனே நீ எங்கு சென்றாய்
பண்பும் பாசமும் பணிவும் கொண்ட
எங்கள் அன்பு புதல்வனே
எங்களை நிர்க்கதியில் தவிக்கவிட்டு
நீ எங்கு சென்றாய்! உன் பிரிவை வெறும்
வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துவிட முடியாதைய்யா
பார்க்கும் இடமெல்லாம் நாம் காணும்
காட்சிகள் எல்லாம் உன் அன்பு முகமே
எங்கள் மனதில் தோன்றுகின்றது
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற
உன்னால் அந்த காலனை மட்டும்
ஏன் வெல்ல முடியாமல் போயிற்று
கடைசிவரை எங்களுக்கு துணையிருப்பேன் என்பாயே
கடைசியில் உன் முகத்தை காணும் பாக்கியத்தை கூட
அந்த காலன் எங்களுக்கு விட்டு வைக்கவில்லையே
எங்கள் மனதின் ஆசைகளையும்
எங்கள் தேவைகளையும் பார்த்து பார்த்து நீ
நிறைவேற்றினாய் ஆனால் உன் தேவைகளை நாங்கள்
நிறைவேற்ற தொடங்கும் போது நீ
எங்கள் எல்லோரையும் தவிர்ப்பில்
ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாயே!!
உன் அண்ணனுடன் ஒன்றாக வெளிநாடு அனுப்பிவைத்தோம்
ஆனால் இன்று உன்னை தொலைத்து
விட்டு நிர்கதியாய் நிற்கிறோமே ஐயா!
உன் அக்காவுக்கு திருமணம் செய்து உன்னுடனே வைத்து
பார்ப்பதாய் உன்னுடன் கூட்டிச் சென்றாய் இன்று அவர்களும்
உன் பிரிவால் வாடுகின்றார்களே ஐயா!
உன் தம்பிக்கு எல்லாமே நீயாய் இருந்து அவனுக்கென
தொழிற்சாலையும் நிறுவிக்கொடுத்து அவனை
கண்ணுக்குக் கண்ணாய் பார்த்துக் கொண்டாய்
ஆனால் இன்று அவனும் உன்
பிரிவால் செயலிழந்து போய் நிற்கின்றானே ஐயா!
உன் தங்கையை அவள் விருப்பம் போல்
படிக்க வைத்தாய் அவள் பல்கழைகழகம் போகும் போது
எங்களை காட்டிலும் நீயே பொறுப்புடனும்
மகிழ்வுடனும் பார்த்து கொண்டாய்!
உன் பட்டமளிப்பு விழாவில் நானும் ஒருவனாய்
வந்திருப்பேன் என்று அவளுக்கு கூறுவாயே
இன்று உனைப் பிரிந்து அவள்
வேதனையில் வாடுகின்றாளே ஐயா!
எங்கள் அன்பு மகனே எங்களை எவ்வளவுக்கு
மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்தாயே ஐயா
அவ்வளவுக்கு இன்று உன் பிரிவால் வேதனை எனும்
கடலில் மூழ்கித்தவிர்க்கின்றோம் ஐயா! நாம் மட்டுமல்ல
உன் பிரிவால் உனது சகோதரர்கள், உற்றார், உறவினார், குடும்பங்கள்
மற்றும் நண்பர்கள் எல்லோரும் மிகுந்த வேதனையில் தவிர்க்கின்றனர்...
உன் ஆத்மா மீண்டும் பிறப்பெடுத்து எல்லோருடனும்
இன்புற்று வாழ இறைவனைப் பிராத்திக்கின்றோம்.