யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனநாயகன் அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று Montreal இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ஞானசெளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரஞ்சிதம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீபா, பிரவீனன், பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகல்யன், நிதிலா, பாலசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாஸ்கரதேவி, கெளசல்யா தேவி, சிறீமதி, காந்திமதி, சதீஸ்குமார், நளாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி, செல்வச்சோதி, செல்வநாயகி, செல்வரதி, செல்வகௌரி, செல்வக்குமார், செல்வநிதி, செல்வராசையன், செல்வரவி, காலஞ்சென்ற செல்வராகவன், செல்வஹரி, செல்வரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சித், அனுஸ்கா, அனாமிகா, அவனிகா, அருமின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.