12ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீ எங்கே சென்றாயோ தனுஜா!
உன் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை
உன்னை இழந்ததால் எங்கள்
வாழ்க்கையே திசை மாறிவிட்டதம்மா தனுஜா...
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது தனுஜா...
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
உன் பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினர்...!!!
தகவல்:
குடும்பத்தினர்