8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
தனுஜா எங்கு சென்றாய் எமைவிட்டு எங்கு சென்றாய்
உயிராய் உனை நாம் நேசித்தோம்
உயிரிலும் மேலாய் எமை நீ நேசித்தாய்
உனை பிரிந்து ஆண்டுகள்
உருண்டோடின எட்டு- ஆயினும்
உன் நினைவலைகள் எம் இரு விழிகளிலும்
ஊற்றாக ஓடும் கடலைகள்
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
ஊருக்கு நீ தனுஜா
உருக்கி எடுத்த எம் தங்கம் நீ
உன் ஆத்மா சாந்தியடைய
உடலோடு உயிர் உள்ள வரை
உனையே நினைத்து உயிர் வாழும்
உன் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்