யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆகியும் எங்களால்
நம்ப முடியவில்லை நேற்றுப்போல்
உள்ளதம்மா!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்தது போல்
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
தங்க மகளே சந்தனமே
தாமரை மலரே வழக்கம் போல்
வங்கி வேலைக்குச் செல்கையிலே
வாகன இயமனைக் கண்டனையோ?
இருபத்தாறு வயதினிலே
எங்கள் வாழ்வை இருளாக்கி
அருமை மகளே தனுஜாவே
அரனடி சென்றது தகுமாமோ?
நாளும் பொழுதும் வாடாத
உன் வாசமதை இன்னும் நாம் நுகர்ந்தபடி!
ஊழும் கோளும் எமைப்பிரித்தாலும்
எம் மனதில் குடியிருக்கும்
என்றும் பிரிக்க முடியாதவளாய் நீ!
அந்தச் சூரியனோ ! சிரித்துக் கொண்டே
தன் வட்டப்பாதையில் எங்களையும் அறியாமல்
உன்னை அணைத்துக் கொண்டது
இருந்த போதும் எம்மால் பின்நோக்கி உருளும்
உன் நினைவுகளை இன்னும் நிறுத்த
முடியவில்லை!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்!
அன்பு மகளே தனுஜா........!!!