9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றது ஆயினும்
எம் ஈரவிழிகள் காயவில்லை
நினைவு அது நீங்கவில்லை
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
எத்தனை பிறவி எடுத்தாலும் - உன்
இனிய நினைவுகள் மாறாது
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
எம் மனதில் உன் நினைவிருக்கும்!
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்