5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா தர்மலிங்கம்
(சீட்டுக்கார தங்கம்மா)
வயது 83
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு ஓடிற்றோ உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு எம்மோடு நிறைந்திருக்கும் அம்மா..
பொன்னோடு பொருள் சேர்த்து
பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
அம்மாவின் நிழலின் கீழ் வாழ்கின்ற வரம் வருமோ!!!
உம் உதிரத்தால் எமக்குள் உம்மை சுமக்கின்றோம்
உடலை பிரிந்தோமே தவிர உம்மையல்ல
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
தங்கம்மா அத்தை? நீங்கள் எம்முடன் இல்லாவிடினும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி??? என்றும் உங்கள் நினைவுகளுடன், Rajkumar & Suganthey Australia