2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா தர்மலிங்கம்
(சீட்டுக்கார தங்கம்மா)
வயது 83
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா தர்மலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
இரண்டு ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
தங்கம்மா அத்தை? நீங்கள் எம்முடன் இல்லாவிடினும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி??? என்றும் உங்கள் நினைவுகளுடன், Rajkumar & Suganthey Australia