1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா தர்மலிங்கம்
(சீட்டுக்கார தங்கம்மா)
வயது 83
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
அம்மா.. இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும் மூழ்கித் தவிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தங்கம்மா அத்தை? நீங்கள் எம்முடன் இல்லாவிடினும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி??? என்றும் உங்கள் நினைவுகளுடன், Rajkumar & Suganthey Australia