4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனநாயகம் கலியுகவரதன்
(கலி, வரதன்)
வயது 46

அமரர் தனநாயகம் கலியுகவரதன்
1974 -
2021
வட்டக்கச்சி இராமநாதபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 07-02-2025
கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனநாயகம் கலியுகவரதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவில் கலந்தோடி நிழலில் இசைந்தாடி
நெஞ்சில் உயிர் வாழும் உறவே
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்திடாதிருக்க
வேரென இருந்தவரே சகோதரனே!
தொலைதூரம் உங்களை தொலைத்துவிட்டு
தவிக்கின்றோம் தனிமையில்!
கண்னீரில் மிதக்கின்றோம்!
கைகோர்க்க நினைக்கின்றோம்!
தோள் சாயத்துடிக்கின்றோம் சகோதரனே!
உதிர்வுகள் உடல்களுக்கு மட்டும்தான்
பதிவுகள் பாசமனங்களின் நிரந்தர இருப்பிடம்
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு நீங்கள்
ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல
எம் இதயங்களும் என்றென்றும்
உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்..!
தகவல்:
குடும்பத்தினர்