யாழ். வேலணை வடக்கு இலந்தைவனத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வெள்ளை மனம் கள்ளமற்ற பேச்சு பொறுமையின்
சிகரம் போனதெங்கே எமை விட்டு?
மனையாள் பரிதவிக்க மகள்மார் ஏங்கி நிற்க
மருமகர்கள் துயருற்றிருக்க தாத்தா தாத்தா என
பேரர்கள் தேடித் தவிக்க என்ன சொல்லி
ஆற்றிடுவோம் உங்கள் பிரிவை
நல் மகனாய் சகோதரனாய் கணவனாய்
தந்தையாய் நற் கல்விதனை பிள்ளைகட்டு
கற்பித்து நல் வழிகாட்டி இமைப் பொழுதில்
காலனவன் கவர்ந்து விட்டான் தவிக்கின்றோம்
நாம் தரணியிலே...
உற்றார், உறவினருக்கும் கலங்கி நிற்க வந்தகடன்
தீர்ந்தனென்று பயணம் முடிந்ததுவோ
விதித்ததோர் விதியால் விண்ணகம் சென்றதை
பொறுத்திடதான் முடியுமோ போனதெங்கே எமைவிட்டு
நீங்கள் காட்டிய நற்பண்பின் வழியாக நாமும்
தொடர்ந்து நடந்திடுவோம்.
மீண்டும் பிறப்பு உண்டானால் அப்பா என்று
அழைத்திட மீண்டும் நீங்கள் எமக்குள் பிறந்து
தந்தையாக வேண்டும் எத்தனை ஜென்மங்கள்
போனாலும் ஆறாது உங்கள் பிரிவுத்துயர்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அப்பாவின் மரணச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், அசாதாரண கால சூழ்நிலையிலும் இறுதி அஞ்சலிக்கு நேரில் வந்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.